1969 இல் வெளியான முத்திங்கள் ஏடு. இரண்டாவது இதழ் இது. ஆசிரியர் கோ.கிருஷ்ணசாமி., சேலம் குகையிலிருந்து இதழ் வெளியிடப்பட்டுள்ளது. நீலபத்மநாபன், ஐராவதம், சி.மணி. தட்சிணாமூர்த்தி, மிரோஜெக், ஞானக்கூத்தன், கார்த்திகேயன், வைத்தீஸ்வரன், செல்வம், சி.மணி ஆகியோரது படைப்புகள் இந்த இதழில் காணப்படுகின்றன. இதழிலுள்ள யானை பற்றிய போலந்து நாட்டின் கதை ( மொழிபெயர்ப்பு) மிக அருமையாக இருந்தது. (சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழில் காணலாம்) இதழ் முழுவதும் லினோகட் ஓவியம் காணப்படுகிறது. உரைவீச்சுகளும். சிறுகதை. கட்டுரைகளும் இலக்கியத் தரமாக இருப்பதைக் காணமுடிந்தது. மதிப்புரை. அஞ்சல் என ஒரு இதழுக்கான அத்தனை கூறுகளோடு சிறப்பாக வெளிவந்த இதழ் இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,