பூச்செண்டு. 1969 களில் சென்னையிலிருந்து சு. ராசேந்திரன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். முதல் ஆண்டின் 12 ஆவது இதழ் இது. மதுரை, பொள்ளாச்சி, தூத்துக்குடி, நாகர்கோவில், புதுவை, சென்னை போன்ற இடங்களிலுள்ள கல்லூரிகளின் மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த இதழானது நடந்துள்ளது. மாணவர்களை செயற்குழுவில் அமர்த்தி இதழின் செயற்பாட்டைத் தொடர்ந்துள்ளது. இதழின் படைப்பாளர்களாக மாணவர்களை உயர்த்தியுள்ளது. பெருந்தலைவர்களையும், அவர்களது மாணவப்பருவத்தில் உற்றுநோக்கி அவர்களது செயற்பாடுகள் பற்றி எழுதி மாணவர்களை வழிநடத்தியுள்ளது. அறிஞர் அண்ணாவின் மரணச் செய்தியைக் குறிப்பிட்டு அவரது மாணவப்பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளது. வந்த மடல்களை வெளியிட்டுள்ளது. புதுமைத் தொடர் என தலைப்பு ஒன்று ஒவ்வொரு திங்களும் கதை வேறு என ஒரே தலைப்பில் வெவ்வேறு சிறுகதைகளை எழுத ஊக்குவித்துள்ளது. இலக்கியப் பக்கங்கள், மகளிர் பகுதி என இயங்கியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,