நந்தி. 1969 இல் வெளியிடப்பட்ட 6 ஆவது ஆண்டின் 7 ஆவது இதழ் இது. சென்னை செனாய் நகரிலிருந்து சித்த மருத்துவத்திற்காக சித்தமருத்துவக் குழுவினரால் வெளியிடப்பட்ட இதழ். இந்த இதழ் பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. சமயம், சமூகம், தமிழ் இலக்கியம், சித்த வைத்தியம், மக்கள் உடல்நலம் என்கிற கூறுகளை உள்ளடக்கியதாக இதழ் வெளிவந்துள்ளது. மருத்துவர் பு.மு.வேணுகோபால் எழுதியுள்ள அகத்தியர் பற்றிய குறிப்பு அகத்தியர் என்ற பெயருடைய பலர் இருந்தனர் அவர்களைப் பற்றிய குறிப்பு எனப் பட்டியலிட்டுள்ளது. மரணமில்லா வாழ்வும், சித்தர் காயகற்பமும், கருவின் லீலைகள், மருத்துவ வெண்பா, பத்துப்பாட்டில் ஒரு பாட்டு, மரபுப்பாடல் என இதழ் இலக்கியத் தரமான மருத்துவ இதழாக மலர்ந்துள்ளது. இதழில் மருத்துவம் தொடர்பான விளம்பரங்கள் உள்ளன. இதழ் வெளியீட்டார் சாது வி. நாராயணசாமிப் பிள்ளை.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,