நாடகக்கலை. 1970 களில் ஆறு.அழகப்பன் நாடகம் தொடர்பான கருத்துகளுக்கானத் தொடர்ந்த இதழ் இது. இது நான்காவது இதழ். இதழில் நாடகவாணர் முகவரிகள், பரிசுச் சீட்டும் நூல்களும், கஸ்தூரி திலகம், நடிகர் திலகத்திற்கு, அண்ணா நாடக வாழ்வில், மயிலை ரசிகரஞ்சனி சபா, தமிழ் நாடகங்கள், சத்திய தரிசனம், நான் பார்த்த நாடகங்கள், போர்ப்பரணி, கண்ணீர் வெள்ளம், வாழ்த்துகிறோம், சிங்கப்பூரில் தமிழ் நாடகங்கள், அறிஞரின் ஓர் இரவு, சிந்தனை மேடை, 2000 வயதான நாடக அரங்கம் - என்கிற படைப்பாக்கங்கள் உள்ளன. டாக்டர் உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ள தமிழ் நாடகங்கள் என்ற கட்டுரை சங்க இலக்கியங்களில் எங்கெங்கெல்லாம் நாடகக்கூறுகள் உள்ளன - நாடகம் எப்படி நிகழ்ந்தது - என்பதைக் காட்டுகிற - இலக்கியச் சுட்டுகளாக இருந்து - உயர்தரத்ததாக அமைந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,