எழிலோவியம். 1970 இல் கவிதைக்காக வெளிவந்த பண்ருட்டி பரமசிவனின் எழிலோவியம் இதழ் இது. பதிவு பெற்ற இதழாக ஒற்றைத் திங்கட்கு ஒருமுறை வெளிவந்துள்ளது. சென்னை மண்ணடி, மலையப்பன் தெருவிலிருந்து பண்ணுருட்டி பரமசிவன் வெளியிட்டுள்ள இதழ். இந்த இதழ் முதலாம் ஆண்டின் 5 ஆவது இதழ். ஒவ்வொரு பக்கத்தின் கீழும் இந்த இதழ் எழுதியுள்ள கவிதை வரிகள் - எழுத ஆசை இருக்கும் கவிஞர்கள் எழிலோவியத்தில் எழுதி மகிழலாம் - பொங்கும் ஊற்றெனப் பொங்கல் மலரினைத் தங்கத் தையில் தரும் எழிலோவியம் - அடுத்த ஓவியம் அதிக இனிப்பினைக் கொடுக்கும் மாம்பழக் குலையைப் போலவே. - தம்பி தங்கைகள் தாமே எழுதிச் செம்மாம் பிஞ்சுபோல் சிறுபாடல் அனுப்பலாம் - ஏராளப் பகுதிகள் இடமின் மையால் வாராமல் போயின, வரும் மறு இதழில் - உறுப்பினர் கட்டணம் ஒற்றை ஆண்டுக்கு உரூபாய் நான்கு ஓரிரு மலர்களுடன் - இதழுகக்கு இதழில் இனிப்பினைத் தடவும் புதுப்புதுப் பகுதிகள் புனலாறாய்த் ததும்பும் - பத்தரை மாற்றுப் பசும்பொன் போன்ற முத்திரைக் கவிதை முதலிடம் பெறும் இனி - ஓவியம் வளர உறுப்பினர் ஆகக் காவியக் கவிஞர் கட்டாயம் சேருவீர் - விருப்பம் மிகுந்த விற்பனை யாளர்கள் அருமைத் தமிழக மனைத்தும் தேவை - கலலூரி மாணவக் கவிஞரின் கவிதைகள் செல்லப் பிள்ளை போல் சிறப்பாய் வெளிவரும் - வியாபாரத்தைப் பெருக்க விரும்பிடு கின்ற வியாபாரிகள் ஓவியத்தில் விளம்பரம் கொடுக்கலாம் - இந்த ஓவியம் ஈன்ற சுவையினைத் தந்திபோல் எமக்கு முந்தி எழுதுக -


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,