மல்லி. 1971 களில் சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து வெளிவந்த பதிவு பெற்ற திங்களிதழ். அரசியல், சிறுகதை, மகளிர் பிரச்சனை, என அனைத்தையும் ஒரு ஈர்புடைய பல்சுவைச் செய்தியாக மாற்றி வெளியிட்ட இதழ் இது. அழகுச் சிலை என்ற கோட்டோவியத் தொடர்கதை இதழில் உள்ளது. அப்பாவுக்கு ஒரு ரெட்லைட், அவளோடு அழகிருந்தென்ன என்று சிறுகதைகள் ஈர்ப்பு காட்டியே வெளியிடப்பட்டுள்ளன. பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களது கருத்துரையையும் வெளியிட்டுள்ளது. மகளிர் பகுதி என தையல் கலை பற்றி படத்துடன் வெளியிட்டுள்ளது. மனவிகாரங்கள், இவர்கள் கவலைப்படுகிறார்கள் என்ற தொடர்களும் இந்த நோக்கிலேயே அமைந்துள்ளன. விவசாயப் பகுதி, காந்தியம் என அனைத்தையும் இணைத்துப் பல்சுவையாக இதழ் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,