முதன்மொழி. 1971 ஆம் ஆண்டு உலகத்தமிழ்க் கழகத்தின் தொடர்பு இதழாக திங்கள் ஒரு முறை மலருகிற தெளிதமிழ் இதழாக பேராசிரியர் தி.வை.சொக்கப்பனார் அவர்களால் தமிழ்க்குடில், அளகாபுரம், சேலம் 4 லிருந்து வெளிவந்த இதழ். துணை ஆசிரியர் அரிமாப்புலவர். சிறப்பாசிரியர் மொழிநூல் மூதறிஞர் ஞா.தேவநேயப்பாவாணர். இந்த இதழ் முதலாமாண்டின் மூன்றாவது இதழ். இந்த இதழ் பாவாணர் பிறந்த நாள் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. தனியிதழ் 25 சல்லிகள். ஆண்டொப்பம் உரூவா 5.00. இதழின் தலையங்கமாக உலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடந்துள்ளது பற்றிய குறிப்பை எழுதியுள்ளது. தேவநேயப் பாவாணரின் தெளிதமிழ்க் கருத்துரைகளை உள்ளடக்கிய இதழாக இந்த இதழ் வெளிவந்துள்ளது. உலகத் தமிழ்க் கழகத்தின் செய்திகள் வெளிவந்துள்ளன. இதழில் சிறுவர்களுக்காக வெளிவந்த தமிழ்ச் சிட்டு தெளிதமிழ் இதழான தென்மொழி, மாணாக்கன், பூஞ்சோலை, அறிவு - என்கிற தெளிதமிழ் இதழகள் பற்றிய குறிப்பும் உள்ளன. அடுத்த இதழில் மதுரை மாநாடு பற்றிய நிகழ்ச்சித் தொகுப்பு வெளிவரும் என அறிவித்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,