மலர் மணம். 1971 சூன் மாதம் சென்னையிலிருந்து ஆசிரியர் அமிர்தம் அவர்களால் திங்கள் இருமுறை வரும் நடுநிலை ஏடு என அறிவித்துக் கொண்டு அரசியல் சமூக பொருளாதார கலையும் பிறவும் வெளியிடுகிறது எனத் தலைப்பிலிட்டு தொடங்கப்பட்ட முதல் இதழ். அட்டையின் விளக்கமாக இசுலாமுக்கு பிறையும் நட்சத்திரமும், கிருத்துவர்களுக்கு சிலுவையும், வடகலை தென்கலை என வைணவர்களும், இருவித நாமங்களும், பெளத்தத்திற்கு தர்மச்சக்கரமும், சைவத்திற்கு பட்டையும் திலகமும் என்று இருக்கின்றன. இம்மதங்களைக் கூட்டுச் சேர்த்து இவற்றின் மொத்தச் சின்னங்களை முறைபடுத்தியதில் முன் அட்டையில் உள்ளபடி அமைந்தது - எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த இதழில் இசுலாமிய வங்கமே என்று தலையங்கத்தில் எழுதியுள்ளது. சிணடிகேட் காங்கிரசார் இந்திரா காங்கிரசில் சேர்வது பற்றிய கேலிச்சித்திரம் வரைந்துள்ளது. மதமா காட்சியா என்று ஆசிரியரின் கட்டுரை உள்ளது.வாழ்க நற்றமிழர் என்ற எள்ளல் கட்டுரையும் உள்ளது. வித்தியா பவனத்தில் விந்தை மனிதர்கள் என்று அரசியல் கட்டுரை எழுதியுள்ளது. வையகம் வாழியவே என உலகநாடுகளைப் பற்றி எழுதியுள்ளது. 25 காசு விலையில் தனிச்சுற்றாக 20 பக்கங்களில் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,