தமிழம் இதழ், 1972 நவம்பர் திங்களில் (2003 துலை 19) உலகமுதல்வி அவர்களால் தொடங்கப்பட்ட தனித்தமிழிதழ். தமிழம் முதல் இதழில் தென்மொழி இதழாளர், பாவலர் பெருஞ்சித்திரனார் அளித்திட்ட வாழ்த்துரை.

தமிழர்க் கின்னொரு தனித்தமிழ்த் தாளிகை
'தமிழம்' என்னும் பெயரால் தளிர்த்தது !

அமிழாத் தமிழை அரியணை யேற்றி
உலகத் தமிழாய் உலாவர வைப்பதும்
அமிழுந் தமிழரை அமிழாது காத்தே
இமியும் அவர்க்கோர் இழுக்கிலா துயர்த்தி
வாழ வைப்பதும் 'தமிழம்' வருபயன் !

தாழ வைப்பது 'தமிழ'த்திற் கில்லை.
தம்பயன் நினையாது தமிழ்ப்பயன் கருதும்
செம்பியன் துணைவி உலக முதல்வி
இயக்கும் 'தமிழம்' சிறப்புற இயங்கும் !
மயக்குறு தமிழர்க்கு மயக்கறு மருந்திது !


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,