இறைக்குருவனார் நடத்திய தனித்தமிழ்த் திங்களிதழ். 1972 பிப்ரவரி திங்கள் ( தி.ஆ.கும்பம் 2003) பாவாணரின் 71 ஆவது பிறந்தநாள் சிறப்பிதழாக தொடங்கப்பட்டது. ஆண்டுக்கட்டணம் ரூ3 எனவும் தனியிதழ் 25 பைசா எனவும் அறிவித்துள்ளது. எழுதுவோர் கவனிக்க என - உருப்படிகள் முற்றும் தனிச் செந்தமிழில் ஆக்கம் பெற்றிருத்தல் வேண்டும் என அறிவித்துள்ளது. தமிழாய்ந்த அறிஞர்கள் பலரது வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, தரமான கட்டுரைகளை மட்டுமன்றி மொழி பெயர்ப்புகளையும் வெளியிட்டுள்ளது. தனித்தமிழ் மட்டுமல்லாது பகுத்தறிவோடு பார்ப்பனீயத்தைச் சுட்டிக் கொட்டவும் செய்துள்ளது.மரபுப்பாடல்கள், இலக்கியநுட்பம், உரைகல் எனச் சிறப்பாக வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,