அர.திருவிடம் வெளியிட்ட பகுத்தறிவு இதழ். 1972 களில் திருவாரூரில் தொடங்கப்பட்டு, பிறகு சென்னையில் சொந்த அச்சகம் நிறுவி பகுத்தறிவுக் கருத்துகளை நுட்பமாக வெளியிட்ட திங்களிதழ். பெரியாரின் கருத்துகளை முதன்மைப்படுத்தி வெளியிட்ட இதழ். மந்திரமா தந்திரமா? என அறிவியல் விளக்கம் தந்து செய்முறை காட்டுவது அருமை. சாலை இளந்திரையன், கி.வீரமணி, சி.பி.சிற்றரசு, நெ.து.சுந்தரவடிவேலு என இயங்கியவர்களது பகுத்தறிவு குறித்த கருத்துகளையும் இணைத்துள்ளது. கோட்டோவியத்தின் வழி உணர்வேற்றியுள்ளது. பரிசுச்சீட்டு, குடும்ப நலத்திட்டம் போன்ற அரசின் செயல்திட்ட விளம்பரங்களும் காணப்படுகின்றன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,