மயில். 1972 களில் திருவிடைமருதூர் ஜயசக்தி அச்சகத்திலிருந்து அச்சாகி வ.வேணுகோபாலன் வெளியிட்ட திங்கள் இருமுறை இதழ் இது. துணை ஆசிரியர்கள் கு.ரா.கிருஷ்ணமூர்த்தி, டி.ஏ.இராமசாமி. இது முதல் ஆண்டின் எட்டாவது இதழ். தலையங்கம், பொங்குகின்ற பொங்கல், மாதவியின் காதலன், கேள்வி-பதில், எழுத்தாளர்களுக்குப் பரிசு, பொன்மொழிகள், பெண்களைப்பற்றி அறிஞர்கள், எல்லை என்பது, உனக்கெதற்கு, கட்டுரையின் குற்றங்கள், இலக்கியப் பொன்மொழிகள், விளக்கம், இயற்கை வைத்தியம், வெள்ளி ரதம், நிலை, உங்கள் ராசிபலன் - என்கிற படைப்பாக்கங்களை இந்த இதழில் வெளியிட்டுள்ளது. திருவிடைமருதூர் முத்தமிழ் மன்றம் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளது. சிரிப்பு, கேள்விபதில், சிறுகதை, இலக்கியம் எனப் பல்சுவையோடு இதழ் வெளிவந்துள்ளது. கண்ணியம் இதழாளர் ஆ.கோ.குலோத்துங்கன் இந்த இதழை அனுப்பி வைத்திருந்தார்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,