மாலா. 1972 அக்டோபரில் இந்த இதழ் தனது 23 ஆம் ஆண்டின் 8 ஆவது இதழை வெளியிட்டுள்ளது. ஆன்மீக இதழ். ஆசிரியர் எஸ்.எஸ்.சர்மா. தேசிய இலக்கிய தமிழ் மாதப்பத்திரிகை எனத் தலைப்பில் எழுதியுள்ளது. வினாயகன் படத்தையும் வெளியிட்டுள்ளது. இலக்கிய இதழ் ஒரு வருடம் வருவதற்குள் தடுமாறவேண்டியுள்ளது. ஆனால் ஆன்மீக இதழ் 25 வருடங்களுக்கு மேல் வருகிறது. படிப்பதைவிட பார்ப்பவர்கள் என்றும் எங்கும் அதிகம் தான். இந்த இதழில் 18 புராணக்கதைகளையும், ஐயப்பன் பிறவிக்காரணத்தையும், குழந்தையானந்த சுவாமி, சேசாத்திரி சுவாமி, நித்யானந்த சுவாமி, காமகோடி சுவாமி என வாழ்ந்த முனிவர்களின் படங்களுடன் கருத்துரையை வெளியிட்டுள்ளது. கண்ணன் கருணை என கோராகும்பர் வரலாறு வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,