பாவலர் மு.மகிழரசன் நடத்திய தனித்தமிழ்க் குடும்பத் திங்களிதழ்1973 செப்டம்பர் திங்களில் (தி.ஆ.2004 மடங்கல்) "உறவுறுக தமிழரெல்லாம் ஒன்று சேர்க, உணர்வுறுக, உயிர் பெறுக, உயர்வு தேர்க, அறுத்தெறிக குல, மதங்கள் அறிவு கூர்க, அனலுமிழ்க, தமிழ்ப் பகையை அறுத்தல் ஓர்க" என்ற மகிழரசனின் பாடலுடன் இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்துள்ளதாக அறிகிறோம். வணிக நோக்கில்லாது தனித்தமிழ்ச் செய்திகளை முதன்மைப்படுத்தி வெளிவந்துள்ளது. தனித்தமிழை உலகெங்கும் பரப்பு உலகளாவிய இயக்கம் பற்றி ஊக்குவித்துள்ளது. பாவலர்களின் படங்களும் குறிப்பும் கிடைத்தற்கரியன. வரலாற்றுப் பதிவாய் இருப்பன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,