விவேகசித்தன். 1973 இல் வெளிவந்த இதழ் இது. இது நான்காவது இதழ். தொடர்பு முகவரி சேலம் தமிழ் நாடன். சேலம் 6. முத்துப் பொருநன், ஓடை.பொ.துரையரசன், இலக்கிய தீபம், மீரா, நீல வண்ணன் என நண்பர்கள் குழுவை இணைத்து இதழ் வெளியிட்டுள்ளது. விவேகசித்தனின் பக்கங்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் உள்ளன. கட்டுரையின் இடைஇடையே ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதியுள்ளது. உரைவீச்சிற்கான தலைப்பும் கூட ஆங்கிலத்தில் காணப்படுகிறது. இலக்கியக் கோட்பாடுகளைக் குறிப்பிடும் பொழுது கட்டுரையில் ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதி விளக்கியுள்ளது. Venture in Literrary theories = Alienation. Realism. Romanticsm. Socialogical Realism. Experimentalism, Aestheticism, Modernism, Existencialism, Surrealism, Eroticism - என ஆங்கிலச் சொற்களையே பெரிய எழுத்தில் வெளியிட்டுள்ளது, ஆங்கிலத்தில் சொல்வது மேதாவித்தனம், மெத்தப்படித்தமை என்ற உந்துதல் இருக்கலாம். இவர்கள் முனைந்து அதற்கான தமிழ்ச் சொற்களுடன் அறிமுகப்படுத்தியிருந்தால் அது சிறப்பானதாக இருந்திருக்கும் - பொள்ளாச்சி நசன்


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,