முல்லைச்சரம். 1973 களில் சென்னையிலிருந்து கவிஞர் பொன்னடியான் சிறப்பாசிரியராகவும், வ.தெரசுநாதன் ஆசிரியராகவும் இருந்து வெளியிட்ட இதழ். மரபுக் கவிதைகளும் தரமான கட்டுரைகளும் உடைய இதழ். எனக்கு வந்தவை என்ற பகுதியில் வந்த கடிதங்கள் காணப்படுகின்றன. பாரதிதாசனுக்குப் பின் தமிழ்க் கவிதை உலகம் என்ற தொடர் கட்டுரையை குருவிக்கரம்பை சண்முகம் எழுதியுள்ளார். இந்த இதழில் மகாகவி குமாரன் ஆசான் மலையாளக் கவிஞர் பற்றி வான்முகில் எழுதியுள்ள கட்டுரை காணப்படுகிறது. சோவியத்து நாட்டுச் சமதர்மக் கவிஞர்கள் பற்றிய தொடரும் வெளியிட்டுள்ளது, கொய்த செய்திகள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளது. வி.ஜி.பி யின் விளம்பரத்தைப் பெற்றுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,