உதயம். 1973 களில் சென்னையிலிருந்து தெ.சண்முகம் ஆசிரியரும் வெளியிடுபவருமாக இருந்து வெளியிட்ட இதழ். 16 பக்கங்களில் மாதமிருமுறை இதழாகத் தொடர்ந்துள்ளது. விலை 30 காசு. இது 6 ஆவது இதழ். வி.பி.சித்தன் இந்திய பொருளாதாரத்தில் இன்றைய பத்திரிகைகள் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். ராஜேந்திரசோழன் எழுதியுள்ள சிகப்புக் காவிகள் கட்டுரை இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. இதில் வெளியான இரண்டு உரைவீச்சுகளைப் பார்ப்போம்.

கற்பின் வறுமை

போலீஸ் காவலுடன்
முக்காட்டுப் பெண்களின் ஊர்வலம்
நடுத் தெருவில்
பிராத்தல் கெராக்கிகளாம்
கற்பில் சிறந்தவள்
கண்ணகியா? மாதவியா?
நேற்றைய பட்டிமன்றம்
என் நினைவில்
இந்தச் சகோதரிகளுக்கும்
ஒரு பணக்காரக்
கோவலன் கிடைத்திருந்தால்...UN EMPLOYED

கற்க கசடற என்றாய்
கற்றேன்
நிற்க
அதற்குத் தக என்றாய்
நின்றேன்
சொல்லிழுக்குப்பட்டு சோகாப்பர்
என்பதனால் மட்டும்
நாகாக்க முடியவில்லை
என்னால்
வேலை கொடு


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,