ஏடு. 1975 இல் வெளிவந்த இதழ் இது. இது ஐந்தாவது ஆண்டின் ஆறாவது இதழ். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பிதழாக பம்பாய் 22 எனத் தலைப்பிலிட்டு வெளிவந்துள்ளது. ஆசிரியர். எஸ்.இராமதாஸ், பொறுப்பாசிரியர் : வெ.கலைக்கூத்தன். சென்னை தீபம் அச்சகத்திலிருந்து அச்சாக்கி அனுப்பப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி மாணவர்களுக்குப் போட்டிகள் வைத்துப் பரிசளித்துள்ளது. இந்த இதழில் 1975 ஆம் ஆண்டிற்கான பரிசு பெற்ற மாணவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதழில் மரபுப்பாக்களும், சங்கத்தமிழ் தொடர்பான கட்டுரைகளும் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளன. இதழில் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிற தொடர் கட்டுரையும் வெளியாகியுள்ளது. கட்டுரை, சிறுகதை, சிந்தனைக்குச் சில என அனைததும் அடங்கிய இலக்கிய இதழாக, சங்கத்தின் தொடர்பு இதழாக இதழ் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,