புதிய வானம். 1976 இல் மார்ச் மாதம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் குமரி மாவட்டக் கிளையின் இலவச இலக்கிய வெளியீடாக இதழ் மலர்ந்துள்ளது. ஆசிரியர் செந்தீ. ஆசிரியர் குழுவின் பொன்னீலன், ஜகன், தாமரை நடராசன், அருண் பாஸ்கர் ஆகியோர் உள்ளனர். நாகர்கோவிலிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. இதழில் விளம்பரங்கள் காணப்படுகின்றன. உரைவீச்சுகள் முற்போக்குச் சிந்தனையை விதைத்துள்ளன. நகுலனின் நாய்கள் நாவல் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. நா.வானமாமலை பயனுள்ள மரபு வழக்கம் என நடைமுறைகளை ஆய்வுநோக்கில் கட்டுரையாக்கியுள்ளார். இதழில் குமரிமாவட்டக் கிளையின் நிகழ்வு அறிவுப்பும் காணப்படுகிறது. ஆக இதழ் படைப்பாளர்களை ஒருங்கிணைத்தும், பயிற்சிக் களனாக இருந்தும் தொடர்ந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,