இளவேனில். இலக்கிய தீபன். 1975 இல் முத்து அவர்களால் பெருந்துறை வெற்றிவேல் அச்சகத்திலிருந்து அச்சாகி வெளிவந்துள்ளது. இதழில் பிரக்ஞை, கசடதபற, நாணல், தேன்மழை, விடியல், சதங்கை, புதுவெள்ளம், தெறிகள் ஆகிய சமகால இதழ்களை முகவரியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தமிழ்ப்புத்தாண்டின் சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. க்ணணுசாமி என்பவர் இதழ் பற்றிய கருத்துரைகளை வரவேற்றுள்ளார். வெங்கட் சாமிநாதனின் நீண்ட கடிதம் காணப்படுகிறது. கொள்கைப் பிரகடனங்கள், உள்ளார்ந்த நம்பிக்கைகள் என்கிற அடிப்படையில் நவீன இலக்கியத்துள் நுழைந்து வெங்கட்சாமிநாதன் எழுதிய கட்டுரை காணப்படுகிறது. சிந்துஜாவின் கட்டுரையும், இரண்டு உரைவீச்சுகளும் இதழில் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,