உழவன் உரிமை. 1975 களில் சென்னையிலிருந்து - இராமச்சந்திரன் தொழிற்சங்க அறக்கட்டளை வெளியீடாக பதிவுபெற்று வெளிவந்த இதழ். இதழாசிரியரும் வெளியிடுபவரும் உ.கணபதி ராமசுப்பையா. இதழ் தமிழக அரசின் சிறுசேமிப்புத் துறையின் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. முற்போக்கு அரசியல் வார ஏடு என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்தை வளர்க்க இந்திரா அரசு சலுகை, உலகின் உணவு நெருக்கடி, காங்கிரஸ் பைததியக்காரர்களின் கூடாரம் - என்கிற கட்டுரைகள் இதழில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் சர்வாதிகாரம் ஏற்பட்டால் முதலில் பிரிவது தமிழ் நாடாகத்தான் இருக்கும் என்கிறார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் - என்று அட்டையில் கோட்டோவியம் வரைந்துள்ளது. காஷ்மீர் வரலாறு - தி.மு.க.விற்கு உணர்த்துவது என்ன என்ற கட்டுரையை செம்பியன் எழுதியுள்ளார்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,