பாலம். 1976 இல் வனமாலிகை அவர்களால் நடத்தப்பட்ட இதழ் இது. நாகர்கோயிலிலிருந்து வெளிவந்த இதழ் இது. கிளிப்பண்டிதரின் மேசைக்குறிப்புகள் என நடக்கிற நிகழ்வுகளை இதழ் விமர்சனம் செய்துள்ளது. நிறைய உரைவீச்சுகள் இதழில் இடம்பெற்றுள்ளன. இந்த இதழில் பாரவியின் வாய்அரிசி சிறுகதை இடம் பெற்றுள்ளது. எதிர் வினை என அக்கால இலக்கியவாதிகளின் மடல்கள் இடம்பெற்றுள்ளன. வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதைத் தொகுப்பு பற்றிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. சதங்கை இலக்கிய வட்டத்தின் வழி திருவனந்தபுரத்தில் நடந்த நீல.பத்மநாபனின் உறவுகள் பற்றிய கருத்தரங்குக் குறிப்பும் இதழில் உள்ளது. பசுவய்யாவின் நடுநிசிகள் பற்றிய ராஜாராமின் விமர்சனமும் இதழில் உள்ளது. இந்த இதழின் தொடரியாக இந்த ஆசிரியர் திரு வனமாலிகை 90 களில் சதங்கை என்ற இதழ் வழி மிகப் பெரிய இலக்கியப் பதிவினைச் செய்துள்ளார்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,