நயனதாரா. 1976 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து வெளிவந்த இதழ் இது. இளவேனில் ஆசிரியராக இருந்து வெளியிட்ட முதல் இதழ் இது. கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் என்று ஆசிரியர் உரையை இளவேனில் எழுதியுள்ளார். தனிச் சொத்துரிமையை எவனொருவன் எதிர்த்துப் போராடுகிறானோ அவனே தேசபக்தன் - என்கிற கருத்துகளடங்கிய படைப்பாக்கங்களை இதழல் தொடர்ந்துள்ளது. என்.ஆர்.தாசன் தொடாந்து எழுதியுள்ளார். கட்டுரை, சிறுகதை, உரைவீச்சு, துணுக்குகள் என பன்முகநோக்கில் கூனிக்குறுகி ஒடுங்கிக் கொண்டிருக்கிற மக்களைக் காட்டி அவர்களுக்கான விழிப்புணர்வை ஊக்குகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,