அஞ்சுகம். 1977 களில் வெளிவந்த இதழ் இது. இந்த இதழ் 8 ஆம் ஆண்டின் 6 ஆவது இதழ். ஆசிரியர் மீ.சு.இளமுருகு பொற்செல்வி. இந்த இதழில் பேராசிரியர் டாக்கடர் ந.சஞ்சீவி பற்றி எழுதியுள்ளது. இந்த இதழிலுள்ள மக்களாட்சி வெய்யிலா நிழலா என்ற கட்டுரை சிறப்பாக இருக்கிறது. கவிஞர் கண்ணதாசனின் விளக்கு மட்டுமா சிவப்பு கருத்துச் செறிவுடைய உயர் சிந்தனைகளே. கலைஞர் தலைமையில் உருவாக்கப்பட்ட இலக்கிய அணி பற்றிய செய்திகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. இலக்கிய அணியின் அமைப்பு பற்றியும், பல்வேறு மாவட்டங்களில் அதன் பொறுப்பாளர்கள் பற்றியும் இதழில் குறிப்பிட்டுள்ளது. உலகக்குடிமகனின் கவிதை சிறப்பாக உள்ளது. தெரிந்து கொள்ளுங்களேன் என்று சில முக்கிய நாடுகளின் பரப்பளவையும் தலைநகரையும் குறிப்பிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,