மேம்பாலம். 1977 களில் பதிவு பெற்ற மாத இதழாக கோவையிலிருந்து வெளிவந்த இதழ் இது. நரசிம்மலுநாயுடு எஸ்டேட் அறக்கட்டளையின் சார்பாக பி.இராமமூர்த்தி ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ் இது. நான்காம் ஆண்டில் தொடர்ந்துள்ள இதழ் இது. பேரா.ஜி.ஆர்.டி.கலாச்சாரத்தின் பாலம் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதழில் கஸ்தூரி சீனிவாசனின் வாழ்க்கைக் குறிப்பு உள்ளது. சித்ரா சீனிவாசனின் வெற்றிக்கு வழி என்ற ஆங்கிலக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. சித்ரா பற்றிய குறிப்புரையும் உள்ளது. கஸ்தூரி சீனிவாசனின் இரு நாவல்கள் பற்றிய கண்ணோட்டம் இடம் பெற்றுள்ளது. அமரர் சே.ப.நரசிம்மலுநாயுடு அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு (தற்பொழுது 100 ஆண்டுகளுக்கு முன்) எழுதிய திருப்பேரூர் என்ற பேரூர் பற்றிய கட்டுரை உள்ளது. ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி ரெட்டியார் ஏழைகளே சட்ட உதவி அழைக்கிறது என்ற கட்டுரையை எழுதியுள்ளார். உளவியல் பேராசிரியர் ப.நடராசன் இளைஞர்களின் அமைதிப்புரட்சி என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,