இளைஞர் முழக்கம். 1978 இல் வெளியான 6 ஆவது இதழ் இது. சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் திருச்சி மாவட்ட வெளியீடாக திருச்சி 8 லிருந்து வெளிவந்த இதழ் இது. இளைய தலைமுறையே எண்ணிப்பார் உனக்கிருக்கும் வரலாற்றுக் கடமையை - என்ற அழைப்புடன் வெண்மணி ஈகிகள் பற்றிய குறிப்பினை வெளியிட்டுள்ளது. இயக்கச் செய்திகளையும், சிறுகதை, குறிப்பு என விழிப்புணர்வுச் செய்திகளையும் தரமாக விதைத்துள்ளது. திருப்பூரில் நடைபெறவுள்ள முதல் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பைப் பின் அட்டையில் வெளியிட்டுள்ளது. உரைவீச்சில் அமைந்த பாக்கள் அடித்தட்டு மக்களது அவல நிலையைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,