சுவடு. 1978 களில் புதுக்கோட்டையிலிருந்து கனகராசன் வெளியிட்ட இலக்கிய இதழ் இது. தனிச்சுற்று என அறிவித்துக் கொண்டு வெளிவந்தது. இது மூன்றாவது இதழ். இதில் தரமான படைப்புகளைத் தருவதற்காக வேண்டி இனி ஒவ்வொரு இதழுக்கும் இரு மாதம் காத்திருக்க முடிவெடுத்திருக்கிறது - என அறிவித்துள்ளது. இந்த இதழில் வண்ணதாசனின் நிலை, பூமணியின் எதிர்கொண்டு படைப்புகள் வெளிவந்துள்ளன. நிறைய புதுக்கவிதைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சிற்றிதழ்களை ஒருபக்க அளவில் பட்டியலிட்டுள்ளது. புத்தகக் குறிப்பையும். விமர்சனத்தையும் எழுதியுள்ளது. அபத்தவாத நாடகங்கள் என்ற தொடர் கட்டுரை இதழில் காணப்படுகிறது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என நிகழ்வு விமர்சனம் செய்துள்ளது. சுவடுடன் தொடர்ந்து உங்கள் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ள ரூ6 அனுப்புங்கள் என்று சந்தா கேட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,