மூலிகை மணி. 1978 இல் பதினைந்தாவது ஆண்டின் இரண்டாவது இதழாக இந்த மூலிகை மணி இதழ் மலர்ந்துள்ளது, இதழின் ஆசிரியர் வேலூர் மருத்துவர் ஆ.இரா.கண்ணப்பர். இந்த இதழில் கஞ்சாச் செடி பற்றிய குறிப்பு வெளிவந்துள்ளது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்ற தாயுமானவர் பாடலைத் தலைப்பிலிட்டு இதழ் தொடர்ந்துள்ளது. இதழில் நவீன ஆய்வில் மூலிகைகள், நோயும் மருந்தும் , ஓலைச் சுவடியிலிருந்து, குடல் புண் குணமாகிறது, சித்தர்களில் சிலர், மூப்பு ஆராய்ச்சி, சித்த மருந்துகளின் செய்முறை, சித்தர்கள் அருளிய சிடுகா மருந்து - என்ற கட்டுரைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இதழின் ஆசிரியர் உரையில் 15 ஆவது ஆண்டின் தொடக்கம் பற்றிய சுவையான குறிப்புகள் உள்ளன. இதழ் சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது. சித்த மருந்துகள் தொடர்பான விளம்பரங்களும் இதழில் உள்ளன. சித்த மருத்துவக் கருத்துகளைச் சுவையாக மக்கள் விரும்பும் வகையில் சிறப்பாக இந்த இதழ் எழுதியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,