தர்சனம். 1978 களில் பாளையங்கோட்டையிலிருந்து தனிச்சுற்று இதழாக உ.முருகன் தொடங்கிய இதழ். 18 பக்கங்களில் விளம்பரம் ஏதுமின்றி இலக்கிய நோக்கோடு இதழ் வெளிவந்துள்ளது. கலாவின் உணர்வு சிறுகதை, சிவசு எழுதியுள்ள மொழி பெயர்ப்புக் கவிதை, சிவசு வின் குடியிருப்பு சிறுகதை இதழில் உள்ளது. தன் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும், அல்லது தனது மாறுபட்ட எழுத்தாக்க முயற்சியை அச்சாக்கி நண்பர்களுக்குச் சுற்றில் அனுப்ப வேண்டும். அது பதிவாக இருந்து பேசும் என்ற கருத்தாக்கங்கள் மேலெழுந்து நின்ற காலம் இது. ஒன்றிரண்டு இதழ்களோடு இதழ் நின்று போனாலும் அதனுடைய தாக்கம் பல ஆண்டுகளுக்குப் பேசப்பட்டு வந்தது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,