1979 ஆம் ஆண்டில் சூலை மாதம் முதல் இதழ் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் சண்பகராமன். தாதகாபட்டி, சேலத்திலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. இதழில் பன்வர் கட், லினோகட் என செதுக்கி அச்சாக்கும் ஓவிய முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இதழின் அட்டைப்படம் பன்வர்கட் முறையில் அஃக் பரந்தாமன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. கட்டுரை, கவிதை, மாற்றுமொழிக் கவிதை எனப் பல்வேறு புதிய முயற்சிகளை இதழில் நிகழ்த்தியுள்ளது. பாவம் கர்த்தருக்கும் கொஞ்சம் நிழல் தாருங்கள் என்ற உரைவீச்சு நாடகம் தமிழ்நாடனின் படைப்பாக மலர்ந்துள்ளது. புதிய ஆக்கவேண்டும் என்ற உந்துதல் உடையவர்களின் நவீன படைப்பாக்கப்பயிற்சி இதழாக இது தொடர்ந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,