சுதந்திரப் பறவைகள். 1979 களில் கோவையிலிருந்து ந.இக்பால் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ் இது. எல்லாப்பக்கஙகளும் இரண்டு வண்ணத்தில் கலைநோக்கோடு அச்சிடப்பட்டுள்ளன. நல்ல தரமான இலக்கியத்தை மக்கள் எப்போதும் புறக்கணிப்பதில்லை என்பதை நாம் உணர்த்தியாக வேண்டும். வாசகர்களின் ரசனை மிகவும் கீழானது என்ற குற்றச் சாட்டுகளை நாம் முறியடிக்க வேண்டும் - அது உங்களிடம்தான இருக்கிறது.. சந்திப்போம் மறுபடியும் என்று இந்த இதழில் (இதழ் எண்2) எழுதியுள்ளது. துணுக்குக் கவிதைகள், குறிப்புகள் என வெளியிட்டுள்ளது. சோவியத் இலக்கிய மொழிபெயர்புக் கதையைத் தந்துள்ளது. 79 ல் இயங்கிய இலக்கியப் படைப்பாளிகளை இனம் கண்டு அவர்களது படைப்புகளை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,