தண்டனை. 1979 இல் இரண்டாவது ஆண்டின் இரண்டாவது இதழாக ஆசிரியர் மனுநீதி அவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட இதழ் இது. முழுநிலவு இதழ் எனத் தன்னை வரிசைப் படுத்தியுள்ளது. உயரப்பரைப் துரும்பாக உருவாக்கிடச் செய்குவோம், உழைப்போரை பெருந்தூணாகத் தோன்றிடச் செய்வோம், உருவாகும் சமுதாயத்தில் உறவு கொண்டிடச் செய்வோம், என உழைப்பாளர்களுக்காக் கருத்தளித்த இதழ் இது. தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும், அரசியல் தலைவர்கள் சாதிப் பெயரை உடனே நீக்க வேண்டும், அறிவை மதிக்க வேண்டும், பகுத்தறிவுக் கருத்துகளை முன்னெடுக்க வேண்டும் என்று எளிய நடையில் மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியுள்ளது. இதழ் 4 பக்கங்களில் வெளிவந்த போதிலும் இதன் வீறு சிறப்பாகவே உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,