இலக்கிய வெளிவட்டம். 1979 களில் முகவை மாவட்டம் வ.புதுப்பட்டி (அஞ்) வெளிவந்த இலக்கிய விமர்சன வெளியீடு. ஏப்ரல் 1979 இல் வெளிவந்த இது 10 ஆவது வெளியிடு. இந்த இதழில் புதுக்கவிதை ஒரு திறனாய்வு - புத்தகம் பற்றி கெளதமன் விமர்சனம் எழுதியுள்ளார். எஸ் . காப்பன் மார்க்சியமும் கிறிஸ்தவ மனித நேயமும் என்கிற கட்டுரையை எழுதியுள்ளார். கண்ணீர் மறைந்து விடும் கவிதை மறையாது - என்ற கட்டுரையை தமிழவன் எழுதியுள்ளார். இந்த மூனறு கட்டுரைகள் மட்டுமே இதழில் உண்டு. வேறு எந்த செய்திகளும் கிடையாது. இப்படி எடுத்துக் கொண்ட கருத்தினை நுட்பமாக நுணுகிக் கண்டு - அதன் பன்முக வடிவத்தை ஆழமாகக் காட்டுவதுதான் சிற்றிதழ் என்று இலக்கிய விமர்சகர் வட்டத்தில் பேசப்பட்டது. மற்ற இதழ்கள் யாவும் இவர்களால் குப்பைகளாகவே கருதப்பட்டன. கருத்துச் செறிவற்ற காகிதக் குப்பைகள். இலக்கிய வெளிவட்டம் இதழில் தன்னை யொத்த இதழ்களை பட்டியலிட்டுள்ளது. அவையாவன -1) யாத்ரா, சி.ராமசாமி, பண்ணை மூன்றடைப்பு, திருச்சுழி - 626 129 இராமநாதபுரம் மாவட்டம். 2) படிகள் , 501, 19 ஆவது மெயின் 4 டி பிளாக், ஜெயநகர், பெங்களூர், 3) பரிமாணம், 33.வெ.கோ. சந்து, ம.ந.க.வீதி, கோவை, 4) விழிகள், அருசா அச்சகம், 15 வடக்கு மாசி வீதி, மதுரை 1, 5) கொல்லிப்பாவை, இடையன் விளை, பொற்றையடி. குமரி மாவட்டம், 6) சுவடு, இருமாதம் ஒரு முறை, 3266 மேற்கு நான்காம் வீதி, புதுக்கோட்டை. - இலக்கிய வெளி வட்டம் இதழ் அகரம் அச்சகம் சிவகங்கையிலிருந்து அச்சாகியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,