யுக விழிப்பு - திருப்பூர் 4 லிருந்து விழிப்பு எனத் தொடங்கித் தொடர்ந்த இதழ், பதிவு பெற்ற பிறகு யுகவிழிப்பு என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1980 களில் வெளிவந்த இதழ். முற்போக்குக் கருத்துகளை இதழில் வெளியிட்டுள்ளது. சிற்றிதழாக இருந்தாலும் குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடாமல், பல பகுதிகளையும் இணைத்து அவர்களிடமிருந்து விளம்பரம் பெற்று, முற்போக்குச் சிந்தனையாளர்களை இணைத்துக் கொண்டு தொடர்ந்து வெளிவந்துள்ளது. மொழிபெயர்புகளையும், உரைவீச்சுகளையும் வெளியிட்டுள்ளது. சொல்லுங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று மடல்களை வெளியிட்டுள்ளது. எங்கு சென்றிருந்தாய் என்ற உரைவீச்சில் .... பசி அரக்கர்களின், கைகளில் சிக்கி, மீள முடியாமல் நாங்கள், தவித்தபோது - வெடிகுண்டு வீச்சால், உடல் சிதைந்து எங்கள், தோழர்கள் விழுந்தபோது - அவர்களைக் காக்க முடியாமல், ஓடிப்போன நீ, பைபிளாக, குரானாக, கீதையாக எங்கள் முன், இப்போது வந்து நிற்கிறாயே, அப்போது எங்கு சென்றிருந்தாய் ? என எம்.கணபதி உரைவீச்சின் வழி வினாவும் போது நெஞ்சு வலிக்கிறது. மதத்தில் கொடுமை புரிகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,