1/4 (கால்) காலாண்டிதழ். சூலை - செப் 1980 இல் முதல் இதழ் வெளிவந்துள்ளது. இது இரண்டாவது இதழ். சென்னையிலிருந்து மலர்மன்னன் ஆசிரியராக இருந்து வெளிவந்த இதழ். தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டிதழ் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வெளிவந்த இதழ். தமிழ்நாட்டுக் கிராமங்களின் முப்பதாண்டு பொருளாதார வளர்ச்சி (1950-1980) உண்மை நிலவரம் என்ற தரமான பொருளாதாரக் கட்டுரையுடன் இதழ் தொடங்குகிறது. பிரபஞ்சன், வெங்கட் சாமிநாதன் போன்றோரின் தரமான கட்டுரைகளுடன் இதழ் வந்துள்ளது. மூங்கில் குருத்து என்ற சிறுகதையை திலிப்குமார் எழுதியுள்ளார். லா.ச.ரா., சுந்தரராமசாமியின் நாவல் அறிமுகமும், நகுலனின் கவிதையும் வெளியாகியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,