தமிழியக்கம். 1980 களில் தமிழெழுச்சி மேலிட கிளர்ந்து எழுந்த இதழ்கள் பல். அவற்றுள் ந.அரணமுறுவல் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இதழ் தனித்துவம் மிக்கது. இதழோடு மட்டுமல்லாமல் தமிழன்பர்களை இணைத்து இயக்கம் கட்டவும் ஊக்குவித்த இதழிது. அரசியல், தமிழ், பகுத்தறிவு, விழிப்புணர்வு என்கிற அனைத்துக் கோணங்களிலும் படைப்புகளை வெளியிட்டு, மக்கள் விழிப்புணர்வு இதழாக மலர்ந்துள்ளது. " மனிதன் ஆகா, நானுமோர் மனிதன், என்னும் போதே நின் உடல் தன்னில், ஆயிரங்களிற்றின் வலிமை அடங்குமே" எனக் கவிதை வரிகளால் உணர்வூட்டி வளர்தெடுத்த இதழிது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,