ஸ்வரம் இதழ். 1983 இல் வெளிவந்த 16 ஆவது இதழ் இது. ட்டி.எம். நந்தலாலா ஆசிரியராகவும், சிறப்பாசிரியராக பிரம்மராஜனும் இருந்து உதகையிலிருந்து வெளிவந்த நவீன கவிதைக்கான மாத ஏடு இது. விலை குறிப்பிடப் படவில்லை. தனிச்சுற்று இதழாக - உள்நாடடு அஞ்சல் அட்டையிலும், புத்தக வடிவிலும் கல்லூரி ஆசிரியர்களது மேற்பார்வையில் வெளிவந்த இதழ் இது. இந்த இதழில் பழமலையின் கவிதை வெளிவந்துள்ளது. காசியப்பன் புதுக்கவிதை ஒரு பார்வை என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் புதுக்கவிஞர் என்று இயங்கியவர்கள் எழுதிய உரைவீச்சுகளின் விமர்சனமானது பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்ரமாதித்தியன் உரைவீச்சும் இடம் பெற்றுள்ளது. ஆசரியர் காற்று விரல் இசை என்ற உரைவீச்சினை எழுதியுள்ளார். தனலட்சுமி சிறு சேமிப்பின் விளம்பரம் பின் அட்டையில் காணப்படுகிறது. இதழின் மொத்த பக்கங்கள் 16.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,