இளம் விஞ்ஞானி. 1980 இல் வெளிவந்த 16 ஆம் ஆண்டின் 6 ஆவது இதழ் இது. மாணவர்களுக்கான மாதப் பத்திரிகையாக வெளிவந்துள்ளது, அறிவியல் புதுமைகளை மாணவர்களுக்கு அறிவிக்கும் நோக்குடன் தொடரப்பட்ட விஞ்ஞானக் கல்வி வளர்ச்சிக் கழகத்தின் இதழ். சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது, மாணவர்களுக்கு விடுமுறை மாதமான ஏப்ரல் மே தவிர மற்ற மாதங்களில் தொடர்ந்து வெளியிட்டுள்ளது. அறிவியலின் புதுமையான கண்டுபிடிப்புகளைத் துணுக்குச் செய்திகளாக வெளியிட்டுள்ளது. லேசர், பறவைகளின் மொழி, காற்று சக்தி, நீரியல் சுழற்சி. குற்ற இனங்கள். கடலிலும் பயிர் செய்வோம் - என்கிற குறிப்புகள் இந்த இதழில் உள்ளன. அறிவியல் கண்காட்சி பற்றியும், அறிவியல் மன்றங்களின் செயற்பாடு பற்றியும் இதழில் காணமுடிகிறது. மாணவர்களின் படைப்பாக்கங்களை மாணவர் பகுதி என்றும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,