இங்கும் அங்கும். 1980 களில் கோவையிலிருந்து கு.வெ.கி ஆசான் அவர்களால் வெளியிடப்பட்ட இருமொழி மாத இதழ். இது முதல் இதழ். வேளாண்மைப் பொருளியல் சமுதாயச் சிக்கல் என்ற கட்டுரையை முனைவர் அருணா.அரசுகோ அவர்கள் எழுதியுள்ளார். பாலையின் வளம் என கலித்தொகைப் பாடலின் வழி பாலை நிலத்தின் சிறப்பு வர்ணிக்கப்பட்டுள்ளது. தென்னவன் இலக்கியத்தின் பயன் என்ற குறிப்பினை எழுதியுள்ளார். 1979 ஆம் ஆண்டின் நிகழ்வுக் குறிப்புகள் இதழில் வரிச்செய்திகளாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆங்கிலப் பகுதியில் எவ்வாறு எழுத்தாளன் எழுதக்கூடாது என்ற கட்டுரையும் Fedaralism பற்றிய ஆங்கிலக் கட்டுரையும் இடம் பெற்றுளளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,