1981 இல் சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். இது முதல் இதழ். இதற்குப் பிறகு வந்ததா எனவும் தெரியவில்லை. அரூப செளந் ப்ரேமீள் எழுதிய ஆசிரியர் உரையில் நவீன இலக்கியம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அப்பாத்துரையின் தியான தாரவை குறிப்பிட்டுள்ளார். 64 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த இதழ் கலை நயத்துடனும் தேர்ந்தெடுத்த படைப்புகளுடனும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப்ரமிள் தமிழில் நவீனத்துவம் பற்றிய சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார். ஆல்பர் காம்யு, கலீல் கிப்ரான், வ்ளடீமிர் நபக்கவ், நெட்கூயசு, எரிக் ஆம்ப்லா, பீற்ட்ரவேர்ஸ், மார்ட்டின் எஸ்லின், லூயி மெக்தீஸ் என்பவர்களது படைப்பாக்கங்கள் காணும் பொழுது தேடலும், தெளிதலும், வரிசைப்படுத்துதலும் இந்த இதழில் எப்படி முறைப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. காலப்ரோதீப் சுப்ரமணியன் ( பிரமிள் படைப்புகளை ஆய்வு செய்தவர்) படைப்பாக்கங்களும் உள்ளன. தியானதாராவின் குறிப்பும் இதழில் உள்ளது. தமிழகத்தின் படைப்பாளிகளும் இந்தப் போக்கில் இதழில் எழுதியுள்ளதைக் காணமுடிகிறது. பிரமிளின் பாறை சிறுகதை இதழிலுள்ளது. செதுக்கிச் செதுக்கி வடித்த சிலைபோல இந்த இதழ் வடிவமைந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,