சுட்டி. 1981 களில் சென்னையிலிருந்து சுட்டி சுந்தர் அவர்களால் மிகத் தரமாக வெளியிடப்பட்ட சிறிய அளவுள்ள, கருத்துச் செறிவுடைய தரமான இதழ். கிரிக்கெட் என்கிற விளையாட்டு, எப்படி மக்களுக்குத் தீங்கானது என்பதனை இந்த இதழில் அட்டைப் படம் காட்டுகிறது. இது இரண்டாவது இதழ். சுட்டி இதழ் தொடர்ந்து 108 இதழ்களை வெளியிட்டுள்ளது. தனது இதழோடு நின்றுவிடாமல் சுற்றியுள்ள இதழ்களையும் வளர்த்தெடுத்த பெருமை சுட்டிக்கு உண்டு. இதழ் எளிமையாக, அனைவருக்கும் புரியும்படியாக, சிறு சிறு துணுக்குச் செய்திகளாக நடப்புகளையும், பிரச்சனைகளையும், செய்திகளையும், விழிப்புணர்வையும் இதழ்வழி விதைத்துள்ளது. பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களுக்கும் கருத்தளிக்கும் இதழாக இது இருந்துள்ளது. வறுமை, சுரண்டல், பெணஅடிமை, அரசியல், கேலிக்கூத்து, அறியாமை, பிற்போக்குத் தனம் என அனைத்துப் பிரச்சனைகளின் நுட்பம் கூறுகளை எளிமையாக விளக்கியுள்ளது. இந்த இதழின் ஆசிரியர் ஒரு கல்லூரிப் பேராசிரியராக இருந்து இதழைத் தொடர்ந்துளார் என்பது வாழ்த்துதற்குரிய செய்தி.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,