பார்வைகள். 1982 இல் சென்னையிலிருந்து மாணவர்களது புதுமை இதழாக மலர்ந்துள்ளது. ஆசிரியர் குழு, ஆலோசனைக்குழு, கல்லுரித் தொடர்பாளர் குழு என மாணவர்கள் இயங்கியுள்ளது சிறப்பாக இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த இதழ்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பார்வைக்கு வந்த இதழ்கள் என அறிவித்துள்ளது. மாணவர்களே படைப்பாளிகளாக பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளது வாழ்த்துதற்குரியது. மாணவர்களுக்கிடையில் போட்டிகள் வைத்து அதுபற்றிய செய்தியையும் அறிவித்துள்ளது. நேர்காணலை புதிய கோணத்தில் அணுகியுள்ளது. சிரிப்பு, துணுக்குச் செய்திகள், கவிதை, கட்டுரை எனப் பன்முக ஆற்றலோடு படைவர்களது படைப்பாற்றலை வளர்க்கும் படிக்கட்டாக இந்த இதழ் இருந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,