மாலை நினைவுகள். 1982 களில் நாமக்கல் கோட்டையிலிருந்து கே.பழனிச்சாமி ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். இந்த இதழை தமிழக நூல் நிலையங்கள் வாங்கிக்கொள்ள அரசிடமிருந்து ஆணையும் பெற்றுள்ளது. பதிவு பெற்ற இதழாக பல்வேறு செய்திகளைக் கொண்டு வெளிவந்துள்ளது. உலக சமாதானம் பற்றியும், மண்டைக்காடு சம்பவம் பற்றியும் எழுதியுள்ளது. இந்த இதழில் வரப்பெற்றோம் பகுதியில் சென்னை உணர்வுகள், திருப்பூர் புதிய பறவை, மோகனூர் மோகனத்திரை, மானாமதுரை நவீனம், சென்னை அரசி இதழ், சென்னை வெளுப்பு இதழ், சோழசக்கா நல்லூர் மாயூரம் வெளிச்சம் இதழ் - ஆகியவை காணப்படுகின்றன. இந்த இதழில் மனோபாலாவுடனான நேர்காணலும், அணியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தனிச்சிறப்பு பற்றியும் எழுதியுள்ளது. தொடர்கதை, குறிப்பு, கட்டுரை என படிப்பவர் மகிழும் வகையில் இதழானது வடிவமைக்கப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,