மயன். 1982 களில் வெளிவந்த இதழ். சென்னையிலிருந்து இதயம் வெளியீடு சார்பாக ஆசிரியர் மணியன் வெளியிட்டுள்ள இதழ் இது. வெகுஜன ரீதியில் மக்களை ஈர்க்கும்படியாக இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் நகம் கடிக்கும் பழக்கத்தை ஒழிப்பது எப்படி என்ற குறிப்பும் அதறகான ஓவியர் மதன் அவர்களது கோட்டோவியப் படமும் உள்ளது. அபஸ்வரம் ராம்ஜியின் பதில்கள் என படிப்பவர்களுக்கான வினா விடைப்பகுதி அமைந்துள்ளது. இளம் கவிஞர் வைரமுத்து என மணியன் கட்டுரை எழுதியுள்ளார். பாலகுமாரன் எழுதியுள்ள தினமும் என்னைக் கவனி கதை உள்ளது.டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தியின் கட்டுரையும் உள்ளது. தமிழ் நாவல் வளர்ச்சி பற்றி வல்லிக் கண்ணன் தொடர் கட்டுரை எழுதியுள்ளார். புதுக்கவிதையும். நிறைய துணுக்குச் செய்திகளும். விந்தைச் செய்திகளும். அறிவியல் குறிப்புகளும். அறிவிப்புகளும் கொண்ட இதழாக இது தொடர்ந்துள்ளது. இது பதிவு பெற்ற இதழாக இருந்து அட்டையை வண்ணத்தில் அச்சாக்கி வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,