1984 இல் பெங்களூரிலிருந்து காவ்யா வின் ஊக்குவிப்பில் வெளிவந்த இதழ் இது. இந்த இதழ் சனவரி 1984 இல் வெளியான 6 ஆவது இதழ். தமிழகத்தின் இலக்கியவாதிகளோடு தொடர்பு கொண்டு படைப்பாக்கங்களைப் பெற்று தரமான இலக்கிய இதழாகத் தொடர்ந்துள்ளது. படிகள், தடம், சுட்டி, அன்னம் விடுதூது, தேன் மழை, புறப்பாடு, மீட்சி, முழக்கம், யாத்ரா, இலக்கிய வெளிவட்டம் என்கிற இதழ் முகவரியை பின் அட்டையில் வெளியிட்டுள்ளது. சரசம் சாகசம் சாண்டில்யன் - என்கிற சுந்தரபாண்டியனது கட்டுரை, வெகுஜன இதழ்களின் பொழுது போக்குத் தன்மையை இலக்கியத்தரமாக எடுத்துக் காட்டுகிற கட்டுரையே. நவீன இலக்கியம், தரமான திரைப்படம் பற்றி பார்வை, இலக்கியச் செய்திகள் என மிகச் சிறப்பாக இதழை வெளியிட்டுள்ளது. "அறிவுத் தேடலுக்கான ஒரு முயற்சி என்ற ஒத்துக் கொள்ளலுடன் வெளிவந்த ப்ருந்தாவனம், இன்னும் அதிக அறிவுத் தெளிவுள்ள ஒரு பாதையைத் தனக்கென வகுத்துக் கொள்வதில் சிறிது காலம் தாழ்த்தி மறுபடியும் வெளிவந்துள்ளது" - என்று ஆசிரியர் உரையில் தனது 6 ஆவது இதழில் குறிப்பிட்டுள்ளது. தரமாகத் தரவேண்டும் என்ற பிடிப்போடு இயங்குவது சிற்றிதழ்கள்தான் என்பதை இது மெய்ப்பித்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,