சுகந்தம். 1983 களில் ஆனைவாரி ஆனந்தன் சிறப்பாசிரியராக இருக்க, சி.பன்னீர் செல்வம், சென்னையிலிருந்து ஆசரியராக இருந்து வெளியிட்ட திங்களிதழ். இது இரண்டாவது இதழ். கவிமலர்கள் எனப் புதுக்கவிதையை வெளியிட்டுள்ளது. சோதிடம், எண்கணிதம், கைரேகை எனவும் இயங்கியுள்ளது. மகளிர் இயல் எனத் தனிப்பிரிவை ஏற்படுத்தி - நல்ல பெண்மணி என்று இயங்குபவர்களது குறிப்புகளை எழுதியுள்ளது. நடந்தவை, நடப்பவை எனச் செய்திக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. தேன்வண்டுகள் தெரிவிப்பவை எனக் கடிதங்களை வரிசைப்படுத்தியுள்ளது. வெகுமக்களை ஈர்க்கிற வகையில் இதழின் படைப்பாக்கங்கள் அமைந்துள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,