நவயுகாவின் கலாச்சாரம். 1983 களில் சென்னை அண்ணா நகரிலிருந்து தனிச்சுற்றாக வெளிவந்த உழைப்பாளர் சிந்தனை இதழின் 25 ஆவது இதழ் இது. மார்க்ஸ் நினைவு நூற்றாண்டு, மே தினம், நவயுகா கலாச்சாரம் 25 ஆவது இதழின் - சிறப்பாக இந்த இதழ் சிறப்பு மலராக மலர்ந்துள்ளது. கார்ல் மார்க்ஸ் பற்றிய கருத்துகளுடன், இந்திய சாதியம் பற்றி மார்க்ஸ் எழுதியுள்ளவை, மார்க்சும் மார்க்சியமும் ஒரு தொழிலாளியின் பார்வையில் என்ற கட்டுரையும், நிகழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை என்று ஜென்னி மார்க்ஸ் எழுதியவையும், மே தின வரலாறு மற்றும் இந்தியாவில் மேதினம் பற்றியும், மார்க்சின் இறுதிச் சடங்கு பற்றியும், கட்டுரைகள் இதழில் உள்ளன. பின் அட்டையில் மார்க்ஸ் தொடர்பான கிடைத்தற்கரிய படங்கள் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,