சத்யகங்கை. 1983 களில் பதிவு பெற்ற இதழாகச் சென்னையிலிருந்து பகீரதன் அவர்களால் வெளியிடப்பட்ட இதழ். விளம்பரங்கள் பெற்றுள்ளது. தனியிதழ் விலை 50 காசுகள். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களோடு தொடர்புடையதால் சக்தி வழிபாடு தொடராக வெளியிடப்பட்டுள்ளது, இந்த இதழில் மலர் மன்னன் அசாமில் நடப்பது என்ன என்று கட்டுரை எழுதியுள்ளார். கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு நினைவலைகள் என எழுதியுள்ளார். கிரிதாரி பிரசாத் கீதைப் பேருரைகள் என்ற தொடர் எழுதியுள்ளார். அட்டையில் உள்ள படம் ரா.அ.பத்மநாபன் முயன்று திரட்டிய பாரதி தொடர்பான தகவல்கள் சித்ரபாரதி என்ற நூலக வடிவமைக்கப்பட்டு வெளியிடுவதைக் காட்டுகிறது. பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தனது பொருளைச் செலவழித்து அதனை அடக்க விலைக்கே விற்க ஏற்பாடு செய்துள்ளதை இந்த இதழ்வழிக் காணமுடிகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,