மக்கள் பாதை மலர்கிறது. 1983 களில் பதிவு பெற்ற இதழாக சென்னையிலிருந்து ஆசிரியர் அ,மறைமலையான் வெளியிட்டுள்ள மாத இதழ் இது. விலை ரூ1. இந்த இதழ் இதனுடைய 6 ஆவது இதழ். எம்.ஜி.ஆரின் வீழ்ச்சிக்கு நடிகையின் சூழ்ச்சியா என்ற கட்டுரை ஆசிரியரால் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இறுதியில் இவர் குறிப்பிட்டுள்ள குறள் - இளையதாக முள்மரங் கொள்க கைளுயநர், கைகொல்லும் காழ்த்த விடத்து - பங்காரு அடிகாளரா, சங்கராச்சாரியாரா என்ற கட்டுரை அறிவூட்டுவதே. விடுதலைத் தளபதிகளை வெஞ்சிறையில் வாட்டுவதா ? டாக்டர் நாவலர் அவர்களே நீங்களுமா? என்ற கட்டுரையும் உள்ளது. மார்வாடிக் கடைகளினால் மக்களுக்கு இடியே என்ற க.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரையும் உள்ளது. பயிரை மேயும் வேலிகள் என்று ஊழல்களைப் பட்டியலிட்டுள்ளது. த,ச. தமிழனார் தேசிய நீரோட்டத்தில் திரு.வி,க வின் எதிரோட்டம் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். தமிழ்க் குடிமகன் எழுதியுள்ள தமிழீழம் உரிமைபெற ஒருமித்த குரல் கொடுப்போம் கட்டுரையும் உள்ளது. பாலஸ்தீன விடுதலை பற்றிய தொடரும் உள்ளது. இந்திய அறிவியல் சாதனை ரோகினி செயற்கைக் கோள் என துணுக்குச் செய்தி வெளியிட்டுள்ளது.புலவர் மு,பாமன் எழுதியுள்ள யார் இந்தச் சிங்களவர் கட்டுரை சிறப்பாக உள்ளது. தூக்குத் தண்டனையா தொலைத்துக் கட்டுவோம் எனற் கட்டுரையும் காணப்படுகிறது. கலைவானில என்று திரைப்படம் தொடர்பான குறிப்புகளும் உள்ளன. நிறைய துணுக்குச் செய்திகள் விழிப்புணர்வு ஊட்டுவதாக அமைந்துள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,