வண்ண மயில். 1983 இல் வண்ண மயில் தமிழின் தரமான ஒரே பத்திரிகை - மாதமிருமுறை - என்று அறிவித்துக் கொண்டு சென்னையிலிருந்து ஆசிரியர் அ.நச்சினார்க்கினியன் அவர்களால் வெளியிடப்பட்ட இதழ் இது. முதல் இதழாக இருந்தாலும் பல்சுவையாக செய்திகளை இலக்கியத் தரமாக மிகத் தரமான அச்சில் அச்சாகி இதழ் வெளிவந்துள்ளது. புதுமைப் பித்தனின் நிர்விகற்ப சமாதி என்ற சிறுகதை இந்த இதழில் வெளிவந்துள்ளது. சுந்தரராமசாமியின் விமர்சனக் கட்டுரைகளிலிருந்து சில குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. பிரம்மஞான சபையின் ரகசியங்கள் என அரிய தகவல்களை வெளியிட்டுள்ளது. புகைப்படக் கலை பற்றிக் குறிப்பு எழுதியதோடு தரமான சில புகைப்படங்களையும் இதழில் இணைத்துள்ளது. ந,பிச்சமூர்த்தி பற்றியும் எழுதியுள்ளது. ஓவியம். ஆராய்ச்சி. தமிழ்சினிமா. மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு செய்திகளை இதழில் இணைத்திருந்தாலும் - இதழ் பல்சுவையாக நீர்த்துப் போகாமல் தரமான இலக்கிய இதழுக்குரிய அத்தனைச் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக இதழ் வெளிவந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,